Sunday 5 February 2017

சுத்த வைத்தியம் ஓர் அறிமுகம்

சுத்த வைத்தியம் ஓர் அறிமுகம்

     மனித சமுதாயம் உருவான காலத்திலிருத்து மனித உடலில் ஏற்படக்கூடிய நோய்களுக்கு பல்வேறு விதமான மருத்துவமுறைகளில் தீர்வுகளை காண்பதிலேயே மனித சமுதாயம் முயற்சி  செய்தது. முயற்சி செய்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும்  ஒவ்வொரு  காலக்கட்டத்திலும் பல்வேறு விதமான உடலியல் பிரச்சினைகளை மனித சமுதாயம் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறது. தற்போது  நடைமுறையில் ஹோமியோபதி, சித்தா, ஆயர்வேதம், அக்குபஞ்சர், அலோபதி, யுனானி ஏன பல மருத்துவமுறைகள் உள்ளன.

நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்                                                       வாய்நாடி வாய்ப்பச்செயல்திருக்குறள்.

  அதாவது நோய் ஏற்படுவதற்காண  மூலக் காரணத்தை ஆராய்ந்து அறிந்து அதற்குன்டான தீர்வை காணவேண்டும்.நோய் என்பது, மனிதன் வாழுகின்ற சூழ்நிலையைப் பொருத்தும், அவனது தொழில் மற்றும் தொழில் செய்யும் சூழ்நிலையைப் பொருத்தும் ஒவ்வொரு மனிதனும் பல்வேறுவிதமான உடலியல் குறைபாடுகளை சந்திக்கிறார்கள்.

  அதாவது, நம்முடைய தினசரி வாழ்க்கையில் திட,திரவ,வாயு கழிவுகள் வெளியேறுகின்றன.  ஆனால்,வெப்ப கழிவுகள் மட்டும் வெளியேறுவதில்லை. வெப்பக்கழிவுகள் வெளியேறுவதில் ஏற்படும் மாற்றங்களினாலும் மற்றும் நம்முடைய தவறான  உணவு பழக்கவழக்கங்களாலும் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன.  
இயற்கையில், நம் உடலானது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என பஞ்சபூதங்களினால் உருவாக்கப்பட்டது. அதேபோல,சுத்த வைத்தியத்திலும் நம் உடலில் உள்ள கழிவுகளை சீராக நீக்குவதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன.
1. எண்ணெய் தேய்த்து குளித்தல். (அதிகாலையில் தலைக்கு நல்லெண்ணெய்  வைத்து சீகைக்காய் தேய்த்து குளிப்பது). கர்ப்ப காலத்தில் மட்டும் தேங்காய் வைத்து சாம்பு தேய்த்து குளிக்க வேண்டும்.

2. பின்னோக்கி நடக்கும் முறை.(கர்ப்ப காலத்திலும்,அறுவைச்சிகிச்சை செய்திருக்கும் போதும் பின்னோக்கி நடப்பதை தவிர்க்கவேண்டும்.)

3.  இடுப்புக்குளியல்.

4.  எண்ணெய் மற்றும் உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது.
5. வெந்நீர் மற்றும் வடிசாறு (பிளைன் சூப்) குடிப்பது (மஞ்சள்,மிளகு, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து பிளைன் சூப் குடிப்பது) என சின்ன சின்ன வழிமுறைகளை நாம் கடைபிடிப்பதன் மூலமாக உடலில் ஏற்படக்கூடிய வெப்பநிலை  மாற்றத்தை நம் உடலை நாமே சரிசெய்து விடமுடியும்.

“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்            மெய்ப்பொருள் காண்பதறிவு”.

என வள்ளுவரின் வாக்கின் படி எந்தவொரு பொருள் குறித்தும் எவர் எதைச் சொன்னனாலும்,அதை நாம் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளாமல் உண்மை என்ன என்பதை ஆராய்ந்து அறிவதுதான் படித்தவர்கள், அறிவுடையவர்களின் செயலாகும்.

சுத்த வைத்தியத்தை நமக்கு அறிமுகபடுதியவர்     தெய்வத்திரு. R.D.கண்ணன் தாமோதரன்  B.A.,B.L., M.sc (Psychology),M.D(Acupuncture), Advocate & Counseling  consultant அவர்கள் அனைவராலும் ஸ்போர்ட்ஸ் டாக்டர் என்ற காரணப்பெயரால் அழைக்கப்பட்டார்.
 இவர் சிறுவயது முதலே பள்ளிக்கல்வியுடன்,விளையாட்டுக்கல்வியையும் முறையாக பயின்றார்.
தமிழ் நாடு கராத்தாண்டக மற்போர் கழகம் மற்றும் இந்திய டிராகன் கராத்தே கிளப் முதலியவற்றின் மூலம் வர்மக்கலையினை ஒரு வைத்திய முறையாகவும் பயின்றவர்.

மேலும்,சட்டக்கல்லூரியில் பயின்ற காலத்தே ISSFO எனப்படும் இந்திய சோசலிச நாடுகள் நட்புறவு கழக உறுப்பினராக இருந்து சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகளில் நற்சான்று பெற்றவர். பின்னர் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தற்காப்புக்கலை வகுப்புகள், குறிப்பாக மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் CIICP, மகளிர்க்கு தற்காப்புக்கலையும், NSSல் (YOGA) NCC மற்றும் ஆடவர் பிரிவிற்கு தற்காப்புப் பயிற்சியும் அளித்து NCC Commanding officer South Zone அவர்களிடம் (CATC) நற்சான்று பெற்றுள்ளார்.

இவருடைய இன்னொரு முகம் தான் மருத்துவ உலகம். பல்வேறு ஆசிரியர்களிடம் சித்தா, பயோகெமிக்_ஓமியோ, பிராணசிகிச்சை, யோகா மற்றும் ஹிப்னோதெரபி முதலானவற்றையும் கைமுறை வைத்தியமும் பல்வேறு மக்களிடம் கற்றுள்ளார்.மக்களுக்கு தனது கல்வியினை அர்ப்பணிக்க எண்ணம் கொண்டு இதற்கென விவேக் பாரதி இயற்கை  நலபாதுகாப்பு விளையாட்டு குழுமம் என்ற அமைப்பை ஏற்படுத்தி தொண்டுகள் புரிந்தார்.

உடற்பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ விஞ்ஞானமும் இணைந்த வெளிப்பாடாக உள்ள இம்மருத்துவமுறைக்கு சுத்த வைத்தியம் என்று பெயர் வைத்ததே அவருடைய எளிமைக்கு சான்று. அனைவராலும் கண்ணன்ஜி என்று அன்புடன் அழைக்கப்படும் எங்கள் அண்ணணுடைய எண்ணங்கள், கனவுகள் நிறைவேறவேண்டும் என்பதே நூலின் நோக்கம்.அவருடைய மருத்துவகளை பின்பற்றி நானும்,எனது நண்பர்களும் கண்டபலன்களை வரும் நாட்களில் பதிவு செய்ய உள்ளேன்.                                      

Saturday 4 February 2017

சுத்த வைத்தியம்


நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம்.


இந்த தளத்தில் சுத்த வைத்தியம் சம்பந்தமாக எழுத போகின்றேன்.



அன்புடன்

உமா மகேஸ்வரி காந்தி